¨ தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் (ஊட்ட சத்து மதிய உணவு (ICDS) தேசிய சுகாதார இயக்கம் (NHM)
¨ தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP)
¨ தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLM) சர்வசிக்ஷ அபியான் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள்,
¨ திட்டபணியாளர்கள் ஆஷா
¨ தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர்கள்
உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கப்பணிகளில் தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களே ஆவர்.
இவர்கள் லட்சக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற குடும்பங்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், ஊரக உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் பாராட்டதக்க வகையில் அடிப்படை சேவைகளை வழங்கி வருகின்றார்கள்
திட்ட பணியாளர்களில் பெரும்பாலானோரும், பயனாளிகளில் பெரும்பாலானோரும், சமூகத்தில் ஒரங்கட்டப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பணியாளர்களில் பலர் 10 முதல் 35 ஆண்டுகள் பணியாற்றி வந்தாலும், இவர்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. கடுமையான உழைப்புச்சுரண்டலுக்கு ஆட்படும் இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இவர்களை சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் விருந்தினர்கள் எனவும் அதிலும் மேலாக “திட்ட பணியாளர்கள்” என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு ”ஊதியம்” என்ற பெயரில் ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு வருடத்திற்கு ஒருமுறை என சிறிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, அரசு திட்டப்பணியாளர்கள் அனைவரும் ”தொழிலாளர்கள்” என அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மத்திய – மாநில அரசுகள் உறுதிபடுத்த முன் வர வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர் – வி.குமார்
வழிமொழிந்தவர் – டெய்சி