அந்தமான் படகு விபத்து விபத்தில் பலியானவர்களுக்கு சிபிஐ(எம்) இரங்கல்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் 46 பேர் நேற்று அங்குள்ள ரோஸ் தீவிலிருந்து வடக்கன் வளைகுடா என்ற பகுதியில் உள்ள தீவுக்கு படகில் சென்றுள்ளனர். 25 பேர் செல்லக்கூடிய படகில் 46 பேர் சென்ற காரணத்தால் படகு கடலில் மூழ்கி 31 பேர் இறந்துள்ளனர் என்ற வருத்ததிற்குரிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.  அதிகமான எண்ணிக்கையில் படகில் ஏற்றிச்சென்ற காரணத்தாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி இதுபோன்ற விபத்துகள் நிகழா வண்ணம் சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த விபத்தில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 31 பேர் படகில் பயணித்துள்ளனர். அதில் 19 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. படகு விபத்தில் உயிர் தப்பியவர்களை உடனடியாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரவும், உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1லட்சம் இழப்பீடு அளிக்கவும் தமிழக அரசு  உடனடியாக எடுத்துள்ள நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வரவேற்கிறது.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply