அம்மா என்றால் புரட்சி – கே.பாலபாரதி

விடுதலை போராட்ட வீரர், பெண் உரிமை, நில மீட்புப் போராளி கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று (15.08.2017) நடைபெற்றது.

விழாவில் நடைபெற்ற கவியரங்கத்தில் தோழர் கே.பாலபாரதி வாசித்த கவிதை;

தோழர் கே.பி.ஜானகியம்மாள்

அம்மா என்றால் சிறகு.
அம்மா என்றால் பறவை.
அம்மா என்றால் கலை
அம்மா என்றால் இசை

அம்மா என்றால் வானம்
அம்மா என்றால் மழை
அம்மா என்றால் நிலம்
அம்மா என்றால் விதை

அம்மா என்றால் ஈரம்
அம்மா என்றால் தென்றல்
அம்மா என்றால் புயல்
அம்மா என்றால் இயற்கை

அம்மா என்றால் எளிமை
அம்மா என்றால் நேர்மை
அம்மா என்றால் தோழமை
அம்மா என்றால் தியாகம்

அம்மா என்றால் உண்மை
அம்மா என்றால் உரிமை
அம்மா என்றால் மார்க்சியம்
அம்மா என்றால் பெண்ணியம்

அம்மா என்றால் விடுதலை
அம்மா என்றால் புரட்சி
அம்மா என்றால் விஞ்ஞானம்
அம்மா என்றால் வரலாறு

அம்மா என்றால் நீ
அம்மா என்றால் நாம்!

வாழ்க கே.பி.ஜானகியம்மாள் தியாகம்!

Check Also

ஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்

ஒக்கி புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை ஒரே தவணையில் வழங்க முடிவு ...