இசைக்கலைஞர் தோழர் திருவுடையான் அகால மரணம் சிபிஐ(எம்) அஞ்சலி!

Com. Thiruvudayanதமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) நேற்று (28.8.2016) இரவு சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்றபோது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் மேடைகளில் தமிழகம் முழுவதும் தனது அற்புதமான குரல் வளத்தால் செங்கீதங்களை இசைத்து மக்களை கவர்ந்த கலைஞன் தோழர் திருவுடையான். கட்சியின் சங்கரன் கோவில் நகரச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் தற்போது தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். சிறந்த பாடகரும், இசைக் கலைஞனுமான தோழர் திருவுடையானின் அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் குறிப்பாக தமுஎகசவிற்கும் பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயரருற்றுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும், கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழுவிற்கும், தமுஎகச தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...