இனி உங்களை காட்டுமிராண்டிகளின் கட்சி என்றே வரலாறு அழைக்கும்!

  • கே.பாலபாரதி

இது ஒன்றும் மன்னர் ஆட்சிக் காலமல்ல, போர் தொடுப்பதற்கு. வீரம் எல்லோருக்கும் பொதுவானது.

உங்களுக்கு வீரமிருந்திருந்தால் பிரிட்டிஸின் பீரங்கியை எதிர்த்துப் போராடியிருப்பீர்கள். போராட வேண்டிய காலத்தில் போராட மறுத்து ஓடி ஒளிந்து கொண்டீர்கள். ஜனநாயகத்தைப் பின்பற்ற வேண்டிய காலத்தில் கலகம் செய்கிறீர்கள். இந்த இரண்டு நடவடிக்கைகளுமே கோழைத்தனமானது.

பல ஆண்டுகள் நாட்டின் விடுதலைக்காக சிறைசென்ற, உயிர்நீத்த வீரப்புதல்வர்களின் புகைப்படங்களே எங்கள் கட்சி அலுவலகங்களில் கம்பீரமாக காட்சி அளிக்கும். அவர்கள் உயிரற்றவர்கள் அல்லர். விடுதலைக்கும் வீரத்திற்கும் உயிரூட்டிக் கொண்டிருப்பவர்கள். வங்கத்தின் சிங்கம், வரலாற்றின் போராளி தோழர் ஜோதிபாசு அவர்கள் பாபர்மசூதி இடித்த கும்பலைப் பார்த்து அப்போதே கூறினார்;

காட்டுமிராண்டிக்கூட்டம் என்று.

எச்சரிக்கை… இனி உங்களை காட்டுமிராண்டிகளின் கட்சி என்றே வரலாறு அழைக்கும்…

சென்னை சிபிஐ(எம்) அலுவலகத்தின் முன்னால் கலகம் செய்த காட்டுமிராண்டிக் காவிக்கும்பலை வன்மையாகக் கண்டிப்போம்.

Check Also

என் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;

விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...