இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்மந்தன் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்மந்தன் இன்று (04.01.2014) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி,ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். அப்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் அ.சவுந்திரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிந்தைய நிலைமைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்தும் விளக்கினார்.

Check Also

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று ...

Leave a Reply