ஊரக வளர்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊரக வளர்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 22 ஆயிரம் பேர் கடந்த 14.3.2017-லிருந்து தங்களது 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் வழங்கல் பணி, கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணி, தூய்மை பாரத இயக்கப் பணி, தனிநபர் கழிப்பறை திட்டப் பணி, மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் போன்ற பல ஊரக வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் ஊரக வளர்சித்துறை ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியில் இருந்து விலகுவது அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.