எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு சிபிஐ(எம்) இரங்கல்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் திரை இசை உலகில் அழுத்தமான தடம் பதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை மக்களிடம் நெருக்கமாக கொண்டு வந்து சேர்த்தவர். இராமமூர்த்தி அவர்களோடு இணைந்தும், தனித்தும் அவர் இசை அமைத்த பாடல்கள் இசை ரசிகர்கள் மனதில் மட்டுமன்றி, மக்கள் மனங்களிலும் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

திரை இசைப்பாடல்களில் பாரம்பரித்தையும், நவீனத்தையும் இணைத்து பல ஆயிரம் பாடல்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி. நூற்றுக்கணக்கான கவிஞர்களையும், பாடகர்களையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.

இசைக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவு தமிழகத்திற்கும், இந்திய இசை உலகிற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

வேகப்படுத்தப்படும் தனியார்மயம் வேலையின்மையை மேலும் அதிகப்படுத்தும்!

ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: