எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு : சிபிஐ(எம்) அஞ்சலி

நவீன தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுவுடமை இயக்கம் மற்றும் கொள்கைகளின் தாக்கத்தால் எழுதத் துவங்கிய ஜெயகாந்தன் தன்னுடைய துவக்க கால எழுத்துகளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை சித்தரித்தார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக் காலத்தில் பயிற்சி பெற்றவர் ஜெயகாந்தன். சரஸ்வதி, தாமரை போன்ற முற்போக்கு இலக்கிய இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவரத் துவங்கின. பின்னர் தன்னுடைய சிறுகதைகள் மூலமும் நாவல்கள் மூலமும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை விதவிதமாக எழுதியவர்.

சோசலிச கொள்கைகளின் பால் அழுத்தமான பிடிப்பு கொண்ட அவர் இறுதி வரை தன்னை ஒரு இடதுசாரி சார்பாளர் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு அவருடைய பங்கு மகத்தானது. சிறந்த சொற்பொழிவாளராகவும் ஜெயகாந்தன் திகழ்ந்தார்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது வாசகர்களுக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி