ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4 ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது.

மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அஇஅதிமுகவும் உறுதியாக எதிர்த்து வருகிறது. தேசிய, மாநில அரசியல் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டும் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளரை  ஆதரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடனும் இதர தோழமைக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply