ஏ. லாசர் – பெரியகுளம் (தனி) தொகுதி

 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ. லாசர் 60 வயதுடையவர். மாணவர் சங்கப் பணிகள் மூலம் பொது வாழ்க்கையை துவக்கியவர். விவசாயத் தொழிலாளர்சங்கத்தின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர். தற்போது மாநில செயற்குழு உறுப்பினராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மக்கள் நலன் பிரச்சனைகளில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

Check Also

திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...

Leave a Reply