கப்பல் ஊழியர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !!

எம்.டி. பிரதிபா காவேரி என்கிற கப்பலில் பணியாற்றி இறந்துபோன பொறியாளர் ஆனந்த் மோகன்தாஸின் சகோதரர் சங்கரநாரயணன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பாராட்டத்தக்கது.   ஆனந்த் மோகன்தாஸ் தவிர இதர ஐந்து ஊழியர்களின் உடல்களும் கரை ஒதுங்கியுள்ளது. கடலில் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் அக்கப்பல் 33 நாட்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது மிகக் கடுமையான குற்றச் செயலாகும்.

ஒரு பள்ளி வேனின்  ஓட்டையில் இருந்து கீழே விழுந்து சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. அப்பள்ளியின் உரிமையாளர் உள்பட சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடலில் செல்லும் கப்பல் பயணிக்கத் தகுதியற்றது என்று அறிந்தும் அரசியல் செல்வாக்கால் அது பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே 37 ஊழியர்களும் ஏறத்தாழ மூன்று மாதங்களாக உண்ண உணவின்றி எலிகளையும் கரப்பான் பூச்சியையும் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். கப்பல் உரிமையாளரின் லாப வெறியும் லஞ்ச ஊழலுக்கு அடிபணிந்து அனுமதித்த அதிகாரிகளும் தான் இந்த அட்டூழியங்களுக்கும் இறப்புகளுக்கும் காரணமானவர்கள். கப்பல் உரிமையாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.   புயல் எச்சரிக்கை வந்ததும் காப்பாற்ற

கப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், போலீஸ் கமிஷனர், சென்னை துறைமுக அதிகாரிகள் என்று அனைவரிடமும் மன்றாடியதாகவும் யாருமே உதவி செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உயிருக்குப் போராடுபவர்களது முறையீட்டையும் இறைஞ்சுதலையும் கூட புறக்கணிக்கும் அரசு நிர்வாகத்தின் செவிட்டுத் தனமும் அரக்கத்தனமும் கொடூரமானது. கண்டிக்கத்தக்கது. கப்பல் ஆங்ரேஜில் இருந்தாலும், துறைமுக பாதுகாப்பாளர் (ஊடிளேநசஎயவடிச) என்கிற நிலையில் கப்பல் அதில் உள்ள பொருட்கள் மற்றும் உயிர்களுக்கான பாதுகாப்பும் பொறுப்பும் துறைமுக சபை தலைவருடையதே.

எனவே, துறைமுக சபைத்தலைவரும், இக்குற்றத்திற்கான பொறுப்பேற்க வேண்டியவரே.   இத்தகைய கொடூரம் இனியொரு முறை நிகழா வண்ணம் தடுக்க தவறிழைத்தவர்கள், கேளாக்காதினராக இருந்தோர் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும் மாலுமிகளுக்கும் உரிய நிவாரணமும் அளிக்க மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...

Leave a Reply