கரும்புக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்திட மாநில அரசுக்கு சிபிஐ(எம்) வேண்டுகோள்!

தமிழக கரும்பு விவசாயிகள் கரும்புக்கு நியாயமான விலை கோரி தொடர்நது குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் மத்திய அரசு நிர்ணயித்த விலை ரூ.1700, அதோடு மாநில அரசின் பரிந்துரை விலை ரூ.650-ஐயும் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.2350 கரும்பு விவசாயிகள் பெற்றனர். இந்த ஆண்டு மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தியுள்ளது. இதனைச் சேர்த்தால் இந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2750 விலை கிடைக்க வேண்டும். ஆனால், மாநில அரசு டன் ஒன்றுக்கு ரூ.2650/- என நிர்ணயித்து அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசின் பரிந்துரை விலையாக இருந்த ரூ.650 என்பதில் ரூ.100 குறைத்து ரூ.550 ஆக்கி, அதோடு மத்திய அரசு நிர்ணயித்துள்ள இந்த ஆண்டு விலையான ரூ. 2100-யும் சேர்த்து ரூ.2650 என அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இக்காலத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உட்பட இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு தனது பரிந்துரை விலையில் டன் ஒன்றுக்கு ரூ.100/- குறைத்திருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. ஆகவே, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து தனது பரிந்துரை விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply