காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அமைச்சரவை முடிவை தடுத்து நிறுத்துக சிபிஐ(எம்) வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்டிட கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 5,912 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ள அந்த திட்டத்தில், 66.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்கவுள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்திருக்கிறார்.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்க தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசு, புதிய அணைகளைக் கட்டுவதில் முனைப்புக் காட்டிவருவது கண்டனத்திற்குரியதாகும். நடுவர்மன்ற தீர்ப்பை அமலாக்கவும், மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஏற்படுத்துவதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக மக்களை வஞ்சித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்துவதுடன், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு துரித கதியில் செயல்படவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த ...