காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமலாக்க கோரி பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. நீரைப் பெற்றுத்தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட கோரிக்கையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிடவில்லை. எனவே,  மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திட வேண்டுமெனவும், நடுவர்மன்ற தீர்ப்பை அமலாக்கிட பிரதமரை சந்தித்து வலியுறுத்திட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் சென்றிட ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த ...