கிருஷ்ணசாமியின் சுயநலம் சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது

2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக் கேட்க அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக் கொள்ள… டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது.

தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால் இப்படி புறவாசல் வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை.

தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது வீண்பழியை சுமத்துகிறார். பாஜக அதிமுக அரசுகள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப் பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில் நெய் மட்டுமல்ல பொய்யும் கூட வழிகிறதாம்!

 – தோழர் கே.பாலபாரதி

Check Also

தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநர், ஜனாதிபதி சந்திப்பு …

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து குடியரசு தலைவரை #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி & தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தார்கள். முன்னதாக தமிழகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட சிபை, விசிக, மமக கட்சி தலைவர்கள் தமிழக ஆளுநரை சந்தித்திருந்தனர்.