கேரளா, தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையிலான பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் செப்டம்பர்- 25 ந்தேதி சந்தித்து பேசவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வரவேற்கிறது. தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பல்வேறு ஒப்பந்தங்கள் கேரள மாநிலத்துடன் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த சந்திப்பின் மூலம் இருமாநில உறவுகள் பலப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர் மற்றும் பாசன பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.