கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம்

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்தது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் மாவட்டக்குழுக்கள், வர்க்க, வெகுஜனஅமைப்புகள் மற்றும் கட்சித்தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர்  மாநில மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். அதேபோல் ஆங்காங்கு உணவு பொருட்கள், துணி மணிகள் ஆகியவற்றை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுவரை மாநில மையத்திற்கு வந்த நிதியில் முதல் தவணையாக 20லட்சம் ரூபாயை கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Check Also

தமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ...