சர்வோதய இயக்கத் தலைவர் ஜெகந்நாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

 

சர்வோதய இயக்கத்தின் தலைவரும், காந்தி மற்றும் வினோபாவேவின் சீடருமான ஜெகந்நாதன் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில்  மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அஞ்சலி செலுத்துகிறது. 

98 வயதான அவர் 1930-ல் தனது கல்லுரி படிப்பை பாதியில் கைவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், பூமிதான இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். 1968-ல் கீழ்வெண்மணியில் தலித்துகள் குடிசையில் உயிரோடு தீவைத்து கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று அந்த மக்களுக்கு ஆதரவாக நின்றவர். சர்வதேச அளவிலான  பரிசுக்கு இணையான  ரைட் லைவ்லி ஹூட் உள்பட பல பரிசுகளை பெற்றவர். சர்வோதய இயக்கத் தலைவரான ஜெகந்நாதன் அவர்களை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தாருக்கும், சர்வோதய இயக்கத் தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply