சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்

முறையான பிரயாண ஆவணங்களும், நிச்சயிக்கப்பட்ட வேலையும் இல்லாமல் சவூதி அரேபியாவில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை, அவரவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உள்ளூர் அரேபிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மேற்படி நடவடிக்கையில் இறங்கிய சவூதி அரசு ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது நித்தாகத் கொள்கை மூலம் முறையான ஆவணங்களின்றிப் பணிபுரிவோரைத் திருப்பி அனுப்ப முடிவு செய்து கால அவகாசம் அளித்தது. கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் 1 1/2 லட்சம் இந்தியர்கள் உட்பட சுமார் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அதில் சுமார் 20,000த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.

உள்நாட்டில் வேலையில்லாத காரணத்தினால் பிழைப்புத் தேடி, ஏஜெண்டுகளுக்கு பல இலட்சம் ரூபாய் கொடுத்து அங்கு சென்றுள்ள அப்பாவித் தமிழர்கள், தற்போது வேலையும், குடியுரிமையும், குடியிருக்க இடமும் இல்லாமல் சவூதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவுக்குத் திரும்பி வர பயணச் செலவு கூட செய்ய முடியாமல் நிர்க்கதியாக  நின்று தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை உடனடியாகத் தாயகம் திருப்பிக் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply