சாதனையாளர் சச்சினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் இன்று(16.03.2012) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நூறு ஓட்டம் எடுத்து தனது நூறாவது சதத்தை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டம் எடுத்தவர் என்ற பெருமைக்கு உரியவரும் தெண்டுல்கர் அவர்களே.மத்திய அரசு அவருக்கு – அர்ஜீனா விருது,ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது,பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.     கிரிக்கெட் விளையாட்டில் நூறு முறை சதமடித்த சச்சின் தெண்டுல்கர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply