சிபிஐ(எம்) சிபிஐ கூட்டறிக்கை (06.03.14)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சித் தலைவர்கள் இன்று (6.3.2014) மாலை 5 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் நடத்திய சந்திப்பிற்கு பின்னர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவதென முடிவு செய்தோம். இதற்காக நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் அஇஅதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் 40 தொகுதிகளுக்கும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தனித்தே துவங்கிவிட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply