சுதந்திர தின எழுச்சியூட்டும் பாடல்களை குழந்தைகள் இனிமையாக பாடினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்த கொண்ட குழந்தைகளுக்கு தோழர் டி.கே. ரங்கராஜன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் சுதந்திர தின விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் 73வது சுதந்திர தின கொடியேற்றல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 
முன்னதாக கமலா இசைப்பள்ளியின் சார்பில் குழந்தைகளின் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின எழுச்சியூட்டும் பாடல்களை குழந்தைகள் இனிமையாக பாடினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்த கொண்ட குழந்தைகளுக்கு தோழர் டி.கே. ரங்கராஜன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

Check Also

பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன்.