சிம்லா மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி!!

இமாச்சல பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லா மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு நடைபெற்ற நேரடி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

மேயர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சஞ்சய் சௌஹான் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விட 7868 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். துணை மேயர் தேர்தலில் திக்கேந்தர் பன்வார் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விட 4778 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேயர் துணை மேயருக்கான நேரடி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சிம்லா மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு இமாச்சல பிரதேச மாநில செயலாளருக்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Check Also

அறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியில் இருந்து விலகுவது அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

Leave a Reply