சிரியாவைத் தாக்காதே சிபிஐ – சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த முனையும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக்குழுக்கள் வன்மையாக கண்டிக்கின்றன.
பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னா பின்னப்படுத்தியது போன்ற முயற்சியை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சிரிய அரசாங்கத்தை எதிர்த்து  கலகம் செய்பவர்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்து வருகின்றனர். சிரிய அரசாங்கம் இரசாயண ஆயுதத்தை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.
எனவே, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உத்தேசித்துள்ள சிரியா மீதான தாக்குதலை எதிர்த்து 05.09.2013 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது  என தீர்மானித்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலைக் கண்டித்து குரலெழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் வேண்டுகிறோம்.

Check Also

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக!

கடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...

Leave a Reply