சோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிறந்த நாடாளுமன்றவாதியும், 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞராகவும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளையும் பாதுகாக்கும் போராட்டங்களில் பெரும் பங்காற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய போது முன்னுதாராணமாக திகழ்ந்தவர்.

அவரது மறைவால் வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

தமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ...