தமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டையொட்டி, ‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னை தி.நகரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இடது முன்னணி அரசின் சாதனைகள் எனும் குறுந்தகட்டை சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி வெளியிட்டார்.

வி.பி.சிந்தனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ‘ரத்தம் தோய்ந்த வரலாறு’ எனும் குறுந்தகட்டை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும், ‘சிபிஐ(எம்) 21வது மாநில மாநாட்டு கருத்தரங்குகள் தொகுப்பு’ குறுந்தகட்டை சிபிஐ (எம்எல்) விடுதலை மாநிலச் செயலாளர் எஸ்.பாலசுந்தரமும், ‘சென்னை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் வாழ்க்கை குறிப்புகள்’ அடங்கிய குறுந்தகட்டை எஸ்யூசிஐ(கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஏ.ரங்கசாமியும் வெளிட்டனர்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ., மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

தமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது – சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை கொடுப்பதாகவும் உள்ளது. நீட் தேர்வு திணிக்கப்பட்டதால்,  மருத்துவக் கல்விக்கான ...