தமிழக மீனவர் படுகொலை! மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!!

துபாயில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் படுகொலை! மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!! 

இராமநாபுரம் மாவட்டத்திலிருந்து துபாய் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற சேகர், முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகிய நால்வரும் துபாய் நாட்டு மீன்பிடி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அமெரிக்க கடற்படை கப்பல் மேற்கண்ட மீன்பிடி படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், மீதமுள்ள மூன்று மீனவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் முத்துமுனியராஜ் என்பவரின் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேற்கண்ட முத்துமுனியராஜ், இதர மீனவர்களை இந்தியாவிற்கு உடன் கொண்டு வந்து உரிய சிகிச்சை கிடைத்திடவும், சேகர் உடலை இந்தியா கொண்டு வரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இறந்த மற்றும் காயமடைந்த மீனவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இப்பிரச்சனையில் மத்திய அரசு அமெரிக்க உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதும், ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம் அமெரிக்க கப்பற்படை கப்பல் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியிருப்பதும் சரியான நடவடிக்கையாகும்.

வெளிநாட்டில் வேலைக்காகச் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply