தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கடந்த சில மாதங்களாக தமிழக, புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்பட்டு சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் வலைகளையும், மீன்களையும் பறித்துச் செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  மீனவர்களின் துயரங்கள் தொடர்கதையாகி வருகின்ற நிலையில் மீனவர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இலங்கை கடற்படையின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அதேபோன்று தமிழக, புதுவை மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல்பகுதியில் மீன்வளம் குறைந்து மீனவக்குடும்பங்கள் தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது.  மீன்வளம் அதிகம் உள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதார நலன்களை பாதுகாக்க வேண்டும்.

இதற்கு இலங்கை, தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி, விரிவான பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு மத்திய அரசாங்கம் முன்முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்தப் பேச்சு வார்த்தையில் இரு நாட்டு அரசுப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரிய தீர்வுகளை எட்டிட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply