தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதல்கள்! சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக !! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தர்மபுரி மாவட்டம் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் தலித் மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகள் மீது ஆதிக்க சக்திகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி, தீயிட்டு கொளுத்தியதைக் கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்பட உரிய கிரிமினல் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணம் வழங்குமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. வேறு பல ஜனநாயக சக்திகளும் இச்சம்பவங்களை வன்மையாகக் கண்டித்தன. அதன்பிறகு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், தவறிழைத்த சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்த அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதானது ஐயத்தை ஏற்படுத்துகிறது.  

மேற்கண்ட கிராமங்களில் தலித் மக்களுளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், சேதாரமும் மிகக் கடுமையானவை. தாக்குதல்கள் பல மணிநேரம் நடந்தும் காவல்துறை அதிகாரிகள் உரிய தலையீடுகள் செய்யாமல் இருந்துளளனர். இச்சம்பவங்களின் தன்மையையும், இதில் சம்பந்தப்பட்டுள்ள சக்திகளையும் கணக்கிலெடுத்தால் இந்த வழக்குகள் முழுமையும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம்தான் முழு விவரங்களையும் வெளிக்கொணர்ந்து குற்றவாளிகளையும் உரிய முறையில் தண்டிக்க முடியும். எனவே, இச்சம்பவங்கள் குறித்த அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.  

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply