திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான திரு.பாலுமகேந்திரா மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தோம். திரு.பாலுமகேந்திரா இடதுசாரி இலக்கிய அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். தன்னுடைய படைப்புகள் மூலம் மனிதநேயத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியவர். ஆழமான சமூக அக்கறை கொண்டவர்.

சாதி, மதவெறிகளுக்கு எதிராக தன்னுடைய படைப்பாக்கங்களில் முற்போக்கான கருத்துக்களை முன்வைத்தவர். அவர் கடைசியாக இயக்கி நடித்த தலைமுறைகள் திரைப்படத்திலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்தவர்.

அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலை உலக நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...

Leave a Reply