தோழர் என்.சங்கரய்யா – 94வது பிறந்த நாள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கராய்யாவின் 94வது பிறந்தநாளான இன்று (2015 ஜூலை 15) அவரை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

மேலும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு தலைவர்கள், தோழர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Check Also

தலைவர் 11 தகவல்கள்: என்.சங்கரய்யா

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 96 வயது. 1922 ஜூலை 15ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப ...