தோழர் எம்.சீரங்கன் மறைவு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், கட்சியில் சேலம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்.சீரங்கன் காலமானார்.

இவர் சமீப சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பில் வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 13.02.2015 இரவு 09.30 மணி அளவில் தனது 90 வது வயதில் மேட்டூர் ஆர்எஸ் கருமலைக் கூடல் தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் மேட்டூரில் பியட்செல் மில்லில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். மேட்டூர் மில்லில், மேட்டூர் கெமிக்கல்ஸ்சில், கெம்பிளாஸ்ட் டில், சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, மேக்னசைட், ஆட்டோ, சுமைப் பணி, சேலம் ரயில்வே கூட்செட், ஜவஹர் மில் உள்ளிட்டு ஏராளமான பஞ்சாலைகள் போன்றவற்றில் சங்கத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

இவர் சிஐடியுவின் மாவட்டத் தலைவராக, மாநிலக்குழு மற்றும் அகில இந்திய பொதுக்குழு உள்ளிட்டு உயர் பொறுப்புகளில் இருந்து பணியாற்றிவர். தனது உழைப்பால் உயர் பொறுப்புகளுக்கு உயர்ந்தவர்.

அவசர நிலைக் காலத்தில் இருபது மாதங்கள் சிறையில் வாடியவர். கட்சி தடை செய்யப்பட்டபோது பல மாதங்கள் சிறைவாசமும், தலைமறைவு வாழ்வும் வாழ்ந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக போராடியவர்.

அன்னாரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் புகழ் நீடுழி வாழ்க! அன்னாரின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

அன்னார் இறுதிச் சடங்கு 14.02.2015 மாலை 3 மணிக்கு மேட்டூர் ஆர்.எஸ்.கருமலைக்கூடல் இடுக்காட்டில் நடைபெற உள்ளது.

Check Also

சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...