தோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழா

தோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (அக்.22) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கேரள சமாஜத்தில் நடைபெற்றது.
 
#CPIM வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்த சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நூலை வெளியிட எழுத்தாளர் சா. கந்தசாமி, தமிழ் இந்து ஆசிரியர் கே.அசோகன், காயிதே மில்லத் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ஜெ.ஹாஜா கனி, லயோலா கல்லூரி அருட்தந்தை பிரான்சிஸ், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், வழக்குரைஞர் பி.எஸ்.அஜிதா, பேரா. கல்பனா கருணாகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினர் க. கனிமொழி (திமுக), முன்னாள் மத்திய அமைச்சர் மா.சுதர்சன நாச்சியப்பன் (காங்), ஏ.நவநீத கிருஷ்ணன் (அதிமுக), மு.வீரபாண்டியன் (சிபிஐ), வன்னியரசு (விசிக), க.நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நூலை ச. வீரமணி தமிழாக்கம் செய்துள்ளார்.

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...