தோழர். ஞானவாசகம் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

தோழர் ஆர்.ஞானவாசகம் 1980 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது இறுதி மூச்சு வரை கட்சியின் பல பொறுப்புகளில் பணியாற்றினார். கட்சியின் வட்டக்குழு செயலாளராகவும், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் அர்ப்பணிப்பபோடு பணியாற்றியவர்.

2005 முதல் 2013 வரை கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். கட்சிப் பணி அல்லாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல பொறுப்புகளிலிருந்து பணியாற்றியவர். விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் மாநிலத் துணைத் தலைவராகவும் சிறப்புற பணியாற்றியவர். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் 12.09.2013 அன்று தோழர் ஞானவாசகம் காலமானார். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.

தோழர் ஞானவாசகத்தின் மறைவிற்கு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதோடு, அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியின் மாவட்ட தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply