தோழர் தேவபேரின்பன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சிறந்த மார்க்சிய ஆய்வாளருமான தோழர் தேவபேரின்பன் (61) சமீப காலமாக உடல்நலம் பாதித்து, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று (17.09.13) காலமானார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிலுள்ள திருமல்வாடி கிராமத்தைச் சார்ந்த தோழர் தேவபேரின்பன்தோழர் தேவபேரின்பன், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து உழைக்கும் மக்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டவர். அன்றாட இயக்கங்களில் பங்கேற்றதோடு சமூகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற தோழர் தேவபேரின்பன்  தமிழ் மொழி, பொருளாதாரம், தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் மார்க்சியப் பார்வையில் ஆய்வு செய்து 1. தமிழக வளர்ச்சி பிரச்சனைகள் – சவால்கள், 2. உலகமயத்தின் சிந்தாந்த போராட்டம், 3. தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம், 4. தமிழர் தத்துவம், 5. நீதி, அநீதி, சமூக நீதி போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். செம்மொழி உயர் ஆய்வு மையத்தைத் துவக்கி அம்மையத்தின் சார்பாக கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழர் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

தோழர் தேவபேரின்பனின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும் ஜனநாயக இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துவதோடு அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply