தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து!

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது.

ஊழல், மதவாதம், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக கேரள மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காகவும் கடந்த ஐந்தாண்டு காலமாக கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி நடத்திய போராட்டத்தின் வெற்றியாக தேர்தல் தீர்ப்பு அமைந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவிற்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இடது ஜனநாயக முன்னணியின் சட்டமன்றக் குழுத் தலைவராக  தோழர் பினராயி விஜயனை தேர்வு செய்வது என்று கட்சியின் கேரள மாநிலக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கேரள முதல்வராக பொறுப்பேற்க உள்ள தோழர் பினராயி விஜயனுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Check Also

பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முயற்சிக்கு எதிராக குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.