நாட்டுப்புறக் கலைஞர் கோட்டைச்சாமி மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

நாட்டுப்புற இசைக்கலைஞர் கோட்டைச்சாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவகங்கை மாவட்டம், வேலங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி இளம் வயது முதலே சிறந்த பாடகராக மிளிர்ந்தார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களால் முற்போக்கு இயக்க மேடைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரது இசைப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளையும்,செங்கொடி இயக்கத்தின் பெருமைகளையும் தனது கம்பீரமான குரலால் தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு. அவர் பாடிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கின. அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கு பேரிழப்பாகும்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Check Also

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

ஸ்டெர்லைட் ஆலை:  தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்! தமிழக அரசே! ஆலையை நிரந்தரமாக மூட ...