நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டு மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 12 ஆர்ப்பாட்டம்

10-7-2017

நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டு

மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 12 ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களுக்கு  மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. தமிழக மாணவர்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் எந்த முடிவும் எடுக்காமல்  இப்பிரச்சனையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. தமிழக மாணவர்களின் நலன் காக்க இயக்கம் நடத்துவது குறித்து 4-07-2017 அன்று திராவிடர் கழகம் முன்முயற்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி 12-7-2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி அஞ்சலட்டைகள், மின்னஞ்சல்களை மாணவர்கள் அனுப்புவது என்றும் மேற்கண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 2017, ஜூலை 12 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அனைத்துப்பகுதி மக்களையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியில் இருந்து விலகுவது அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.