பாலியல் கொடுமை – கொலை:- விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

செங்கல்பட்டு அருகில் உள்ள பாலூர் வெங்கடாபுரத்தில் நடைபயிற்சி சென்ற ராமன் (63) என்ற அர்ச்சகர் தன்னுடன் வந்த தனது மகள் பத்மஸ்ரீ (25)யை காலிகள் சிலர் கேலி செய்துள்ளதை தட்டிக் கேட்டதற்காக ராமனையும், பத்மஸ்ரீயையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளதில் இருவருமே பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் ராமன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பெண்கள் மீதான இத்தகைய வன்முறைகள் தொடர்வது அதிர்ச்சியளிப்பதும், கவலையளிப்பதுமாகும். குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவதோடு, கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்றும், இத்தகைய குற்றங்களை தடுக்கும் வண்ணம் காவல் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டுமென்றும், பாதிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று ...

Leave a Reply