பெட்ரோல் விலையை அதிரடியாக லிட்டர் ஒன்றுக்கு ரூ. 7.50 உயர்த்தி மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு பின்பற்றும் தாராளமயப் பொருளாதார கொள்கையால் ஏற்கனவே அனைத்துப் பொருட்களின் விலைகளும் செங்குத்தாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு, சாதாரண மக்களையும் நடுத்தர மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும்.
எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்துப்பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.