‘பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பாஜக கருதுகிறது’

வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மகளிர்க்கு 33% ஒதுக்கீடு செய்திடும் சட்ட முன்வடிவை கொண்டுவர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் தர்ணா நடைபெற்றது. தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டார்கள். அதில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உரை பின்வருமாறு;

இந்தச் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 1996 இல் எச்.டி. தேவகவுடா பிரதமராக இருந்தபோது இது அறிமுகப்படுத்தப்பட்டது. 2003 இல் பாஜகவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தபோதும் அது இதனை நிறைவேற்றாமல் ஓரங்கட்டிவிட்டது. 2010 இல் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்டது. இப்போதுள்ள நரேந்திர மோடி அரசாங்கமும் முந்தைய தேஜகூ அரசாங்கத்தைப் போலவே மாறுபட்ட விதத்தில் நடந்து கொள்கிறது. இம்மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இது கொண்டு வரப்பட வேண்டும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அங்கம் என்பதால் அது மனுதர்மத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கிறது. எனவே அது பெண்களை இரண்டாம்தர பிரஜைகளாகவே கருதுகிறது. படுபிற்போக்குத்தனமான ஆர்எஸ்எஸ்-இன் பத்தாம்பசலிக் கொள்கைகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுதும் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

சீத்தாராம் யெச்சூரி

பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

CPIM

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்!

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்! போராட்டங்கள் மூலம் அரசியல் தலையீட்டை வலுப்படுத்துவோம்!