பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

தமுஎகச மாநில துணைச் செயலாளரும், சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் சுந்தரவள்ளி மீது சமூக வலைத்தளங்களில் சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து அருவருக்கத்தக்க, அநாகரீகமான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெண்ணுரிமை சார்ந்தும், ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசி வருவதால் ஆத்திரமடைந்துள்ள மதவெறியர்கள் மற்றும் பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர்.

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாதவர்களின் இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவதூறு செய்பவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.