பொன்.ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்மமான முறையில் இறந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சேலத்திற்கு சென்ற போது  அவர் மீது செருப்பு வீசப்பட்டது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கருத்துக்கள் மீது கடும் தாக்குதலை தொடுப்பதில் தவறில்லை. ஆனால், கருத்து சொல்பவர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.  திரு. பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த ...