போராட்டப் பாதையில் அணி திரள்வோம்! மார்க்சிஸ்ட் கட்சி மேதின வாழ்த்து!

-உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி மக்கள் உவந்து கொண்டாடும் உரி மைத் திருநாளாம் மே நன்னாளில் தமி ழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்களை உரித்தாக்கியுள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தி வருமாறு:-பூமிப்பந்தில் உள்ள ஐந்து கண்டங் களிலும் உள்ள உழைப்பாளர்கள் அனை வரும் கொண்டாடும் ஒரே தினமாக மேதினம் விளங்குகிறது.128வது மேதினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், மனித குலத்தின் பிரச் சனைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வு காண முடியாது என்பது உறுதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொள்ள மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்துகிறது.

இத னால் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் இழந்துவரும் மக்கள் போராட்டப் பாதையில் பேரெழுச்சியுடன் அணிவகுக் கத் துவங்கியுள்ளனர் என்பதையே உலக நிகழ்வுகள் உணர்த்துகின்றன.உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத் திய மற்றும் முதலாளித்துவ நாடுகள் பின் பற்றும் நவீன தாராளமயமாக்கல் கொள் கை, இருப்பவருக்கும்-இல்லாதவருக் கும் இடையிலான ஏற்றத்தாழ்வை அதி கரித்துக் கொண்டே செல்கிறது. உலக நிதி மூலதன சூறாவளியால் ஏழை-எளிய மக்களின் வாழ்க்கை மட்டுமின்றி பல வளர்முக நாடுகளின் பொருளாதாரமும் சூறையாடப்படுகிறது.முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த நெருக்கடியை சமாளிக்க சாமானிய மக்க ளின் வாழ்வை மேலும் ஒட்டச்சுரண்ட முயல்கிறது. மறுபுறத்தில் இதை எதிர்த்த உலகளாவிய போராட்டம் தீவிரமாகி வருகிறது.நேரடியான, ராணுவரீதியிலான தலை யீடுகள் மூலமாகவும் மறுபுறம் நவீன தாராளமயமாக்கல் கொள்கை மூலமாக வும் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத் திய நாடுகள் முயல்கின்றன. இராக்கை நேரடியாக ஆக்கிரமித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய நாடுகள் தற்போது ஈரான், சிரியா போன்ற நாடுகளை மிரட்டி வரு கின்றன. சோசலிச நாடான வடகொரியா வையும் அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது.மறுபுறத்தில் சீனா உள்ளிட்ட சோச லிச நாடுகள் சீரான வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகின்றன. மாற்றுப்பாதை, மாற்றுகொள்கை சாத்தியமே என்பதை வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் மெய்ப்பித்து வருகின்றன.

உலகம் முழுவதும் சோசலிச சக்தி கள், இடதுசாரி சக்திகள் மீண்டும் உயிர்ப் புடன் போராடி வருவது எதிர்காலத்திற் கான நம்பிக்கையை உறுதிசெய்கிறது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அரசு அயல் துறை கொள்கையில் மட்டுமின்றி உள் நாட்டு பொருளாதாரக் கொள்கையிலும் … தொடர்ச்சி 3ம் பக்கம்அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிந்து செல்லும் போக்கை தொடர் கிறது. சில்லரை வர்த்தகத்துறையை பன் னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிட்ட மன்மோகன் சிங் அரசு காப்பீட்டுத்துறை, வங்கித்துறை போன்றவற்றையும் முற் றாக காவுகொடுக்க துணிந்துவிட்டது. உலக பொருளாதார நெருக்கடி எனும் புய லின்போது தேசத்தை தாங்கி நின்ற தூண்களான பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட் டின் எதிர்காலத்தை இருளிடம் ஒப் படைப்பதற்குச் சமமாகும்.இந்திய உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சட்டப்பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை பன்னாட்டு நிறுவனங்க ளின் பாத சேவைக்காக தட்டிப்பறிக்கிறது

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply