மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் 28-03-2016 அன்று குமரியில்!!!

மக்கள் நலக் கூட்டணியின் மாநிலத் தலைவர்கள் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப ;பயணத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். சுமார் 24 மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிடடு, ஐந்தாவது கட்டமாக குமரி மாவட்டம் வருகின்றனர்.

28-03-2016 மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமை தாங்குகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.இசக்கிமுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் பா.திருமாவேந்தன் மேற்கு மாவட்டச் செயலாளர் மாத்தூர் ஜெயன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாற்று அரசியல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 1/4 லட்சம் பேரை திரட்டுவது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடுவது எனவும் தேர்தல் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவும் வாக்குச்சாவடி அளவில் நான்கு கட்சிகளும் உள்ளடங்கிய 40 பேர் கொண்ட வாக்குச்சாவடி பணிக்குழு அமைக்கவும் மாற்று அரசியல் கொள்கைகளை விளக்கி வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கவும் 20-03-2016ல் வெட்டூர்ணிமடத்தில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி முன்னணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Check Also

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறுக – ஜனவரி 22 தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டன இயக்கம்

தமிழக அரசு 55 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர ...