மக்கள் வாழ்வை சூறையாடும் மத்திய அரசின் கொள்கை மற்றும் ஊழலை எதிர்த்து மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம்!

 

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு தேவை இல்லை என்கிற நிலையில் நவீன தாராளமயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகள் தான் இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசாங்கம் கூறி வருகிறது. உண்மையில் இன்றைய இந்தியா சந்திக்கும் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமே இந்தக்கொள்கைகள் அமலாக்கப்படுவதுதான். இந்தக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்தக் காலத்தில் தான் தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. விவசாயத் துறையிலும் சேவை துறையிலும் இதுதான் நிலைமை.  இதனால் வேலை வாய்ப்பு வளர்ச்சி குறைந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து கொண்டே போகிறது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத முறையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் கையிருப்பில் 5.7 கோடி டன் தானியங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் தான் உலகிலேயே கோதுமை விலை அதிகமாகவுள்ள இரண்டாவது நாடாகவும் அரிசி விலை அதிகமாக உள்ள மூன்றாவது நாடாகவும் இந்தியா உள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக,  விலைவாசி உயர்வை அதிகப்படுத்தும் நடவடிக்கையையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை கைவிட்ட மத்திய அரசாங்கம் இப்போது டீசல் விலை கட்டுப்பாட்டையும் கைவிட்டுள்ளது. இதனால், அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறும்;  சிறு தொழில்களும் விவசாயமும், பொதுப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.
 
ஒருபுறம் வேலையின்மை அதிகரித்து வருகிறது. மறுபுறம் சுயவேலை வாய்ப்பில் ஈடுபட்டிருக்கும் 4 கோடி சிறு வணிகர்களையும் மேலும் இதன் மூலம் மறைமுகமாக வேலை பெற்று வரும் 15 கோடி பேரையும் பாதிக்கும் வகையில் வால்மார்ட் போன்ற அன்னிய கம்பெனிகளை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதென்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 
ஆண்டுதோறும் புதிதாக வறுமை கோட்டிற்கு கீழே வருவோரில் 4ல் ஒரு பங்கினர் மருத்துவ செலவின் காரணமாகவே அந்த நிலைக்கு ஆளாகின்றனர். பொது மருத்துவத்தை சீரழிக்கும் வகையிலே மத்திய அரசின் மருந்துக் கொள்கையும் சுகாதாரக் கொள்கையும் அமைந்திருக்கிறது. மருத்துவ வசதியும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது.
 
ஏழை, எளிய மக்கள் வீடற்று, வீட்டுமனைப்பட்டா இன்றி, வீட்டு மனையின்றி   வாழ்வாதாரங்களும் இழந்து தவிக்கிற போது அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரில் அவர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய முயற்சிக்கிறது மத்திய அரசு. மறுபுறம் இந்தியாவினுடைய இயற்கை வளங்கள் பெரும் முதலாளிகளால் சூறையாடப்படுவதற்கான திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசியநீர்க்கொள்கை 2012, குடிநீர் மற்றும் பாசனநீரை தனியார்மயமாக்கும் ஆபத்தில் போய் முடியும். மேலும், ஆளும் அரசியல்வாதிகள் பெரு முதலாளிகள் உயர் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையின் காரணமாக கடைசியாக வெளியான ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்டு  பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் அம்பலமாகியுள்ளன.
 
பொருளாதாரக் கொள்கை, ஊழல் இரண்டிலும் காங்கிரசிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. எனவேதான், பாஜகவும் காங்கிரசும் கடைப்பிடித்து வரும் ஏழை-எளிய மக்களைப் பாதிக்கும் நவீன-தாராளமயக்கொள்கைகளுக்கு மாற்றாக, மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிப்ரவரி 24 முதல் இந்தியாவின் நான்கு முனைகளிலிருந்து மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம் என்ற அகில இந்திய பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறது. கொல்கத்தாவிலிருந்து  பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் தலைமையிலும், மும்பையிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தலைமையிலும், அமிர்தசரசில் இருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பிருந்தா காரத் தலைமையிலும் கன்னியாகுமரியிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்  எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை  கே.வரதராஜன், எம்.ஏ.பேபி, மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ், மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் ஆகியோர்  தலைமையிலும் பிரச்சாரப் பயணங்கள் தொடங்கும். மார்ச் 19-ஆம் தேதி பல லட்சம் பேர் பேரணியுடன் தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தப் பிரச்சாரப் பயணம் நிறைவு பெறும். 
 
இந்த பிரச்சாரப் பயணத்தின் கோரிக்கைகள் கீழ்வருமாறு:-
 
  • அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுக்கான உரிமையை உத்தரவாதப்படுத்து
  • நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்து: வீடற்றோருக்கு வீடு வழங்கு
  • அனைவருக்கும் கல்வியையும் சுகாதாரத்தையும் உத்தரவாதப்படுத்து
  • அனைவருக்கும் வேலை வழங்கு
  • பெண்களுக்கு சம உரிமையையும் சமூக நீதியையும் உத்தரவாதப்படுத்து
  • ஊழலை ஒழித்திடு
 
தமிழகத்தில் பிரச்சாரக் குழுவின் நிகழ்ச்சி நிரல்:

அகில இந்திய பிரச்சாரப் பயணம்

பிப்ரவரி பிரச்சார இயக்கம் – விபரம்

தலைமை: அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராஜன், எம்.ஏ.பேபி, மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ், மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன்.
 
24 பிப்ரவரி, 2013 –  மாலை கன்னியாகுமரியில் துவக்க நிகழ்ச்சி – நாகர்கோவிலில் பொதுக்கூட்டம்
பிப்ரவரி 24 இரவு நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் உரையாற்றுகிறார்.
 
25 பிப்ரவரி, 2013
 
1. காலை 9 மணி வரவேற்பு நிகழ்ச்சி – தக்கலை
2. காலை 10 மணி வரவேற்பு நிகழ்ச்சி – மார்த்தாண்டம்
3. பகல் 11.30 மணி திருவனந்தபுரம் சென்றடைதல்
மீண்டும் பிப்ரவரி 27 மாலை பாலக்காட்டிலிருந்து கோயம்புத்தூர் வழியாக தமிழகம் வரும். அன்று இரவு கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதன் பிறகு பிரச்சார பயணத்தின் வழி கீழ்க்கண்டவாறு இருக்கும்.
 
27, பிப்ரவரி 2013
 
பொதுக்கூட்டம் – கோயம்புத்தூர்
 
28 பிப்ரவரி, 2013
 
1. காலை 10 மணி – மதியம் 1 மணி – வரவேற்பு நிகழ்ச்சி – திருப்பூர்
2. மதியம் 2 மணி – மாலை 4 மணி உணவு – ஓய்வு – திருப்பூர்
3. மாலை 5 மணி – இரவு 7 மணி வரவேற்பு நிகழ்ச்சி – ஈரோடு
4. இரவு 8 மணி பொதுக்கூட்டம் – சேலம்
 
மார்ச் 1, 2013
 
1. காலை 9 மணி – 10 மணி வரவேற்பு நிகழ்ச்சி – சேலம்
2. காலை 11 மணி – மதியம் 1 மணி தர்மபுரி
3. மதியம் 2 மணி – மாலை 4 மணி உணவு – ஓய்வு – தர்மபுரி
4. மாலை 4 மணி முதல் 5 மணி வரை பேரணி, பொதுக்கூட்டம் – தர்மபுரி
5. இரவு 7 மணி – பொதுக்கூட்டம் – ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
 

துணை பிரச்சாரப் பயணம்

பிரச்சார பயணம் – 1
 
தலைமை: மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், ஏ.லாசர்,எம்எல்ஏ, மாநிலக்குழு உறுப்பினர்கள்  ஆர்.கருமலையான், எஸ்.கே.பொன்னுத்தாய்  
 
26.02.13 தேனி –  துவக்கம்
27.02.13 மதுரை புறநகர்
28.02.13 மதுரை மாநகர்
01.03.13 திண்டுக்கல் – பொதுக்கூட்டம்
 
பிரச்சார பயணம் – 2
 
தலைமை: மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.அண்ணாதுரை,எம்எல்ஏ, ஜி.சுகுமாறன் மற்றும்  எஸ்.முத்துக்கண்ணன்  
 
24.02.13 சிவகங்கை – துவக்கம் – மாலை பொதுக் கூட்டம்
25.02.13 சிவகங்கை மாவட்டம் (திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை – பொதுக் கூட்டம்)
26.02.13 இராமநாதபுரம் மாவட்டம் (திருவாடனை, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி – பொதுக்கூட்டம்)
27.02.13 தூத்துக்குடி மாவட்டம் (விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,                   செய்துங்கநல்லூர்)
28.02.13 திருநெல்வேலி மாவட்டம் (திருநெல்வேலி, வீரவநல்லூர், அம்பை, தென்காசி, புளியங்குடி, சிவகிரி – பொதுக் கூட்டம்)
01.03.13 விருதுநகர் மாவட்டம் (ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் – பொதுக்கூட்டம்)
 
பிரச்சாரப் பயணம் – 3
 
தலைமை: மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,எம்எல்ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு மற்றும் வாலண்டினா, ஜே.ராஜ்மோகன் 
 
23.02.13 திருச்சி – தொட்டியம் – துவக்கம், மாத்தூர் – நிறைவு.
24.02.13 புதுக்கோட்டை – கீரனூர் – துவக்கம், ஆவணம் கைகாட்டி – நிறைவு
25.02.13 தஞ்சாவூர் – பேராவூரணி – துவக்கம். திருவிடைமருதூர் – நிறைவு
26.02.13 நாகை – குத்தாலம் புதூர் – துவக்கம், கீழ்வேளூர் – நிறைவு
27.02.13 திருவாரூர் – திருவாரூர் – துவக்கம், திருத்துறைப்பூண்டி – நிறைவு
 
பிரச்சாரப் பயணம் – 4
 
தலைமை: மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், எம்எல்ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.சுந்தரராசன், பி.சுகந்தி, ஆர்.வேல்முருகன் 
 
24.02.13 திருவள்ளூர் (மாலை –  பொதுக்கூட்டம்)
25.02.13 வடசென்னை (மாலை – பொதுக்கூட்டம்)
26.02.13 தென்சென்னை (மாலை – பொதுக்கூட்டம்)
27.02.13 காஞ்சிபுரம் (மாலை – பொதுக்கூட்டம்)
28.02.13 வேலூர் (மாலை – பொதுக்கூட்டம்)
01.03.13 கிருஷ்ணகிரி சென்றடைதல்
 
பிரச்சாரப் பயணம் – 5
 
தலைமை: மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி,எம்எல்ஏ கே.சாமுவேல்ராஜ், மற்றும் கே.எஸ்.கனகராஜ், எஸ்.ஜி.ரமேஷ்பாபு 
 
25.02.13 புதுச்சேரி – துவக்கம்
26.02.13 கடலூர்
27.02.13 திருவண்ணாமலை
28.02.13 விழுப்புரம் – மாலை பொதுக்கூட்டம்
 
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., 23-2-2013 அன்று திருச்சி பொதுக்கூட்டத்திலும், 24-2-2013 அன்று பாண்டிச்சேரி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
 
மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் நாகர்கோவில் பொதுக்கூட்டத்திலும், கோவை பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்வார்.
 
தோழர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல்,எம்எல்ஏ, என்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்கள்.
 
தோழர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், டி.ரவீந்திரன் ஆகியோர் நாமக்கல், கரூர் மாவட்டப் பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்கள்.
 
மாநிலக்குழு உறுப்பினர்கள்  ஆர்.ஜோதிராம், கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்வார்கள்.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply