மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. தியாகிகள் நினைவு ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய முழக்கத்தின் மத்தியில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பி.எம்.குமார்,வி.பால கிருஷ்ணன் நினைவுக்கொடியை பயணக்குழுவிடமிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப், மதுரை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.செல்லம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

செம்படை அணிவகுப்பு

21- வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 21 பேர் செங்கொடிகளை ஏந்தி நிற்க, செம்படை அணிவகுப்புக்கு மத்தியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நன் மாறன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். ‘மக்கள் ஜனநாயப் புரட்சி ஓங்குக’ என்ற முழக்கத்துடனும், ‘சோசலிசத்திற்கே எதிர்காலம்‘ என்ற முழக்கங்களுக்கு மத்தியில் தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.தேவி, பி.கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.மாரிசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார்.

பிரதிநிதிகள் மாநாடு

இதனைத் தொடர்ந்து பிரதிநிதி கள் மாநாடு தொடங்கியது. மாவட்டச் செயலாளர் பா.விக்ரமன் வேலை அறிக்கையையும், வரவு- செலவு அறிக்கையை பா.மாரிசாமியும் சமர்ப்பித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டில் மாநில செயற் குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து திங்களன்றும் நடைபெறுகிறது.

நா.திருமலைக்கு பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் சிங்காரவேலர் நூலகம் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் நூலக ராக நா.திருமலை பணியாற்றி வருகிறார். மாநாட்டில் அவரை மாநிலசெயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பாராட்டி கதராடை அணிவித்து கௌரவித் தார்.

Check Also

கிரானைட் மலையை பேச்சில் மறைக்க முடியாது !

21 ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு திமுக-அதிமுக இருவருமே பொறுப்பு (29.04.2016 அன்று மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளார் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை)  ...