மத்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுகளில் சமமற்ற போட்டியை திணிப்பதை கைவிடு!

 

மத்திய தேர்வாணையம் ஆட்சிப் பணிக்கான தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்துள்ளது.  இது  இந்தி தவிர்த்த, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பயில்வோரை புறக்கணிப்பதாகவும், மேல்தட்டு ஆங்கில வழி கல்வி கற்றோருக்கு கூடுதல் வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
 
மத்திய தேர்வாணையத்தின் இந்த முடிவு மறைமுகமாக இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை திணிப்பதாகவும், கிராமப்புற மாணவர்களையும், நகர்ப்புற ஏழை மாணவர்களையும்  சம நிலையற்ற போட்டிக்கு நிர்ப்பந்திப்பதாகவும் உள்ளது. எனவே, மத்திய தேர்வாணையம் தேர்வு முறையில் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு இதை உத்தரவாதப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொளள வேண்டுமெனவும் ஜனநாயக சக்திகள் இதற்காக குரல் எழுப்பிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 
1. முதல்நிலைத் தேர்வு உள்ளிட்டு அனைத்து தேர்வுகளையும் அனைத்து மொழிகளிலும் எழுத வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
 
2. கேள்வித்தாள் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கொடுக்கப்பட வேண்டும்.
 
3. பிரதான தேர்வில் ஆங்கிலத்திற்கு 100 மதிப்பெண் அளிப்பது கைவிடப்பட வேண்டும்.
 
வேறு மாநிலத்திற்கு செல்பவருக்கு அந்த மாநில மொழிகள் மூன்று மாத காலத்திற்குள் கற்றுக் கொடுக்கும் தேர்வாணையத்திற்கு ஆங்கில மொழியை கற்றுக் கொடுக்க முடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, கிராமப்புற மாணவர்களையும், நகர்ப்புற ஏழை மாணவர்களையும், தாய்மொழியில் பயில்வோரையும்  சமநிலையற்ற போட்டிக்கு நிர்ப்பந்தம் செய்யும் இத்தகைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

5, 8 வகுப்பு பொதுத் தேர்வு திட்டத்தை உடனே கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலை ஏற்று தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டே (2018-19) 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ...

Leave a Reply