மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மார்ச் 28 சென்னையில் உண்ணாவிரதம்

 

தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகள் மக்களின் அடிப்படை தேவைகளான உட்புற சாலைகள், சுகாதார மேம்பாடு, திடப்பொருள் கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படையான பல பணிகளைச் செய்யும் பொறுப்புகளை நிர்வகித்து வருகின்றன. ஆனால் இப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் அதிகாரம் முழுமையாகப் பரவலாக்கப்படவில்லை. மேலும் நிதிப் பற்றாக்குறையாலும், காலிப் பணியிடங்கள் நிறைவேற்றப்படாததாலும் உள்ளாட்சிகள் மேற்படி பணிகளை நிறைவேற்றற இயலாமல் திணறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

எனவே உள்ளாட்சிகளுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கவும், மாநில அரசின் வரி வருவாயில் 30 சதவிகித நிதியை உள்ளாட்சிகளுக்கு மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பகிர்ந்து கொடுக்கவும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட உள்ளாட்சிகளுக்கு அனுமதி வழங்கிடவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 28.03.2013 ல்  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்னர் நடைபெறவுள்ளது. 

உண்ணாவிரதத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளார். கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் அ.சவுந்திரராசன் நிறைவு செய்து உரையாற்றவும், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, சட்டமன்ற உறுப்பினர் க.பீமராவ் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply